புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜ்முடின் முகமட் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றிய A$320,000(ரிம970,000)-ஐ திரும்பப்பெறுவதற்கு நிறைய செலவு பணச் செலவாகாது என்கிறார் முன்னாள் செய்தியாசிரியர் ஒருவர்.
ஆஸ்திரேலிய சட்ட முறைமையில் உள்ள “வெற்றி இல்லை, கட்டணம் இல்லை” என்ற ஏற்பாட்டின்கீழ் அது சாத்தியம் என்கிறார் அனுபவமிக்க புலனாய்வு செய்தியாளரும் மலேசியாகினி பத்தி எழுத்தாளருமான ஆர். நடேஸ்வரன். அதன்படி பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் போனால் வழக்குரைஞர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது.
“எந்தவொரு ஆஸ்திரேலிய வழக்குரைஞருடனும் அப்படி ஓர் உடன்பாட்டைச் செய்துகொண்டு நஜ்முடின் வழக்காடலாம்.
“அதற்கு நிறைய பணம் செலவாகாது. ஆனால், விசாரணைக்கு அவர் நேரடியாக செல்ல வேண்டியிருக்கும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தம் முன்னாள் பள்ளித்தோழர் வழக்குரைஞராக இருப்பதாகவும் அவர் மலேசிய உயர் போலீஸ் அதிகாரி அவருடைய பணத்தைத் திரும்பப் பெற உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் நடேஸ் கூறினார்.