பினாங்குச் சுரங்கப்பாதை வழக்கு: அம்னோ எம்பி ரிம3 மில்லியன் கையூட்டு பெறவில்லை, எம்ஏசிசி அறிவிப்பு

பினாங்கு  கடலடிச்  சுரங்கப்  பாதைத்   திட்டம்    மீதான  விசாரணையை   நிறுத்த  அம்னோவின்   பாலிங்  எம்பி   அப்துல்   அசீஸ்  ரகிம்,  ரிம3 மில்லியன்  கையூட்டு  பெற்றதாகக்  கூறப்படுவதில்  உண்மை  இல்லை    என  எம்ஏசிசி  கூறியுள்ளது.

“கைப்பற்றப்பட்ட    ஆவணங்களை    ஆராய்ந்து   பார்த்ததில்   அவருக்கு  இவ்விவகாரத்தில்     தொடர்பில்லை  என்பது    தெரிய  வந்துள்ளது”,  என   எம்ஏசிசி   துணைத்   தலைமை   ஆணையர்   அஸாம்  பாகி    உத்துசான்  மலேசியாவிடம்    தெரிவித்தார்.

சுரங்கப்  பாதை   நிறுவனத்தின்   குத்தகையாளரான    ஸெனித்   குழுமம்   முன்னதாக    அசீசுக்கும்   இன்னொரு    வணிகருக்கும்   பணம்   கேட்டுக்  கடிதம்  அனுப்பியிருந்தது.

நிறுவனத்துக்கு     “ஆலோசனைச்  சேவைகள்”   வழங்கவில்லை   என்பதால்  அசீஸ்   அவருக்குக்  கொடுக்கப்பட்ட  ரிம3  மில்லியனையும்   மற்றொரு   வணிகர்   ரிம19 மில்லியனையும்   திருப்பிக்   கொடுக்க   வேண்டும்    என  அக்கடிதத்தில்   குறிப்பிடப்பட்டிருந்தது.