சிஐடி தலைவர் விவகாரம் ஒரு தனித்த சம்பவம் அல்ல- டிஏபி எம்பி

பிள்ளைகளை   வெளிநாடுகளுக்குப்  படிக்க     அனுப்பி  வைத்த  புக்கிட்  அமான்    சிஐடி   தலைவர்   வான்  அஹ்மட்  நஜ்முடின்     அதற்காகும்    செலவுகளை  எப்படிச்   சமாளிக்கிறார்   என்ற  கேள்வி   எழுந்துள்ளது.  ஆனால்,  இப்படி  கேள்வி  கேட்கப்பட  வேண்டிய    போலீஸ்  அதிகாரி  இவர்   ஒருவர்   மட்டுமல்ல,  இன்னும்  பலர்    இருக்கிறார்கள்    என்கிறார்    செகாம்புட்    எம்பி   லிம்  லிப்   எங்.

கோலாலும்பூர்   போலீஸ்   நிலையத்    தலைவர்   ஒருவர்    அவரின்    பிள்ளைகளை   வெளிநாடுகளுக்குப்  படிக்க    அனுப்பி    வைத்திருக்கிறாராம்.    அதற்கு   யாருடைய    நிதியுதவியையும்     அவர்   நாடிச்   சென்றதில்லையாம்.   இதை     ஒரு   போலிஸ்   அதிகாரி   உள்பட ,  பலர்     தம்மிடம்     தெரிவித்திருப்பதாக   லிம்  கூறினார்.

அக்குற்றச்சாட்டு   தொடர்பில்   வேறு    தகவல்    எதையும்     அவர்    தெரிவிக்கவில்லை.  மேலும்     தகவல்கள்   தேவையென்றால்   எம்ஏசிசி-யும்   புக்கிட்   அமானும்    தம்மை    அணுகலாம்      என்று   டிஏபி   எம்பி    கூறினார்.

“ஒரு  போலீஸ்   நிலையத்    தலைவர்தான்,  புக்கிட்   அமான்   உயர்    அதிகாரி  அல்ல,   கோலாலும்பூரில்    உள்ள    ஒரு   போலீஸ்   நிலையத்தின்   தலைவர்.  அவர்  தன்  பிள்ளைகளை    வெளிநாடுகளுக்கு  அனுப்பிப்   படிக்க    வைக்கிறார்.

“அதற்கு    அவருடைய  சம்பளம்   போதுமானதா?  புக்கிட்   அமானும்   எம்ஏசிசி-யும்   விசாரிக்க   வேண்டும்”,  என்று   லிம்   இன்று     காலை     செய்தியாளர்களிடம்    கூறினார்.