மலேசியாவுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் பொருள் விலைகள் 70 விழுக்காடு அதிகமாகும் என்பதை எண்ணி மலேசியர்கள் பெருமை கொள்ளலாம் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டு விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறினார்.
இன்று மக்களவையில், பொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து வினவிய ஜி.மணிவண்ணனுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஹம்சா, அரிசி, சீனி, சமையல் எண்ணெய், எரிவாயு, மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு உதவித் தொகை வழங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
“அப்பொருள்களின் விலைகளை அரசாங்கம் நல்ல முறையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளது.
“இந்த அரசாங்கம் வாழ்க்கைச் செலவின விவகாரத்தில் மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதை அறிந்துவைத்துள்ள அரசாங்கம் என்பதை மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என ஹம்சா கூறினார்.