டாக்டர் எம்: நஜிப் குறைந்தது 62 தவறுகள் செய்துள்ளார்

பிரதமர் நஜிப் ரசாக், 2009-ல் பதவி ஏற்றதிலிருந்து, குறைந்த பட்சம் 62 குற்றங்களைச் செய்துள்ளார் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் குற்றஞ்சாட்டினார்.

“நான் அவரது குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளேன். இன்றுவரை நஜிப் செய்த 60 தவறுகளை நான் கண்டறிந்துள்ளேன்,” என்று நேற்று பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது அவர் கூறினார்.

“சமீபத்திய குற்றச்சாட்டு, ஒரு ஆடம்பர படகு சதி, ஈகுவானிட்டி, தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்புடையது,” என்றார் மகாதீர்.

பெர்சத்துவின் தலைவருமான மகாதிர், நஜிப் நாட்டை அழித்துவிட்டதாகவும் கூறினார். எனவே, ஒரு வளர்ந்த நாடாக, 2020 தூரநோக்கு இலக்கை அடைய அவரால் முடியாது என்றும் கூறினார்.

அதற்குப் பதிலாக, 1மலேசியா மக்கள் உதவி திட்டம் (பிரிம்) மற்றும் அதைப் போன்ற வடிவங்களினால் ஆன மற்றதை (தவிடு) அவர் நம்பியுள்ளார் என மகாதிர் கூறினார்.

சிலர் அந்த ‘தவிடு’களால் தங்களை நிரப்பிக்கொண்டதால், அவர்களால் நகரவோ, பேசவோ, கேட்கவோ முடியாமல் போய்விட்டது என்றும் மகாதிர் கூறினார்.