இன்று காலை மணி 8.09க்கு மீண்டும் ஒரு நில நடுக்கம் சாபாவை உலுக்கியது.
ரிக்டர் கருவியில் 3.1 என்று பதிவான அந்த நில நில நடுக்கம் ரானாவுக்கு 16கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக வானியல் ஆய்வுத் துறை ஓர் அறிக்கையில் கூறியது.
“நில நடுக்கத்தன் அதிர்வுகள் ரானாவில் உணரப்பட்டன”, என்று அது கூறிற்று.
நேற்று 5.2 என்று பதிவான மிதமான நில நடுக்கமொன்று ரானாவை உலுக்கியது. சாபாவின் மேற்குக் கரையில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் அந்த நில நடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தார்கள்.
இதனிடையே பாப்புவா நியு கினியின் நியு அயர்லாந்து மாநிலத்தை இன்று அதிகாலை 1.39க்கு 6.7 சக்திகொண்ட நில நடுக்கமொன்று அதிர வைத்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நில நடுக்கங்களால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் வேண்டாம். அதற்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-பெர்னாமா