சுவிட்சர்லாந்தில் கோரிக்கையற்றுக் கிடக்கும் சுமார் ரிம400மில்லியனை மலேசியர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதா வேண்டாமா என்ற தீர்மானத்தின்மீது சுவீஸ் நாடாளுமன்றம் விவாதம் நடத்துவதற்கு முன்னதாக, மலேசிய என்ஜிஓ-கள் மலேசியர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சுவீஸ் எம்பிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.
“பறிமுதல் செய்யப்பட்ட நிதிகளைப் பறிகொடுத்த மக்களிடமே திருப்பிக் கொடுத்தல்” என்ற தீர்மானம் அடுத்த வியாழக்கிழமை விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
“பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகம்மட் சாரி, மலேசியர்களே அப்பணத்தைப் “பெறுவதற்கு உரிமையுடைவர்கள்” என்றுரைத்தார்.
“சுவிஸ் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அந்தத் தீர்மானம்மீது விவாதம் நடத்தவுள்ள எம்பிகளை சுவிட்சர்லாந்தில் பணச் சலவை செய்யப்பட்ட கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அதைப் பெற உரிமையுடைய மலேசிய மக்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டுமாய் சி4-உம் பெர்சேயும் கேட்டுக்கொள்கிறோம்”, என்றவர் கூறினார்.
பணத்தை மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது ஒரு சுயேச்சை அறநிதி ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக மலேசிய மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் ஷாருல் கேட்டுக்கொண்டார்.