குவான் எங்: ஹரப்பானும் பிரிம் கொடுக்க முடியும், பினாங்கைப் பின்பற்றுங்கள்

பக்கத்தான்  ஹரப்பான்    ஆட்சிக்கு    வந்தால்  பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)  இன்றி   அதனால்   1மலேசியா   மக்கள்  உதவித்   தொகை  (பிரிம்)   வழங்க   முடியுமா     என்று   கேள்வி    எழுப்பப்பட்டுள்ளது.

இதற்குப்   பதிலளித்த   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்    எங்,  ஜிஎஸ்டி   இல்லாவிட்டாலும்கூட   ஹரப்பானால்   மக்களுக்குத்   தொடர்ந்து   உதவித்   தொகை  கொடுக்க    முடியும்  என்றார்.

“நாங்கள்  பினாங்கில்  என்ன    செய்கிறோமோ   அதைச்   செய்தால்   போதும்”,  என்று  லிம்  இன்று  கொம்டாரில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.

“மக்கள்மீது   6 விழுக்காடு   ஜிஎஸ்டி-யை  விதித்தால்தான்  பிரிம் கொடுக்க  முடியும்   என்பது   உண்மையல்ல”,  என்று   டிஏபி    தலைமைச்   செயலாளர்   கூறினார்.

“நாங்கள்  பினாங்கில்   ஜிஎஸ்டி   விதிப்பதில்லை.  இருந்தும்  மக்களுக்கு  ரொக்க  உதவி  வழங்குகிறோம்-    மூத்த  குடிமக்களுக்கு  ரிம130,   பல்கலைக்கழக    மாணவர்களுக்கு   ரிம1,000   இப்படி  மற்றவர்களுக்கும்”,  என்றவர்  குறிப்பிட்டார்.