பெர்சத்து எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல் அக்கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் என்று மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
பெர்சத்து உறுப்பினர்களிடமிருந்து பெற்ற புகார்களைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி 28 இல் பெர்சத்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக ரோஸ் தலைமை இயக்குனர் சுரயாட்டி இப்ராகிம் கூறினார்.
கட்சி மற்றும் அதன் கிளைகள் ஆகியவற்றின் கூட்டங்களின் நிகழ்ச்சிக்குறிப்புகள் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மன்றங்கள் சட்டம் 1996 பதில் அளிப்பதற்கு ஏழு நாள் அவகாசம் மட்டுமே வழங்கியிருந்தாலும், ரோஸ் அவர்களுக்கு 30 நாள் கெடு கொடுத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காவிட்டால், செக்சன் 14 (5) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.