பண்டார் துன் ரசாக் கோலாலும்பூரின் தெற்கே உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. அங்கு 1999-இலிருந்து மசீசதான் போட்டியிட்டு வருகிறது. 2008-இலும் 2013-இலும் அங்கு அது தோல்வி கண்டது.
இம்முறை அது அத்தொகுதியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.
ஆனால், இம்முறை அம்னோவும் அத்தொகுதியைக் குறி வைத்துள்ளது.
ஒரு காலத்தில் மசீச அங்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது ஒன்றே அக்கட்சி அத்தொகுதியைப் பெற தகுதியாகி விடாது என்கிறார் பண்டார் அப்துல் ரசாக் அம்னோ தலைவர் ரிசால்மான் மொக்தார்.
இதற்கான காரணம் எளிது: பண்டார் அப்துல் ரசாக் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதி என்பதால் அங்குள்ள மலாய்க்காரர்கள் மலாய்க்கார வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள் என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அதைப் புரிந்துகொண்டுதான் எதிரணியினர் 1999-இலிருந்து அங்கு மசீசவுக்கு எதிராக மலாய் வேட்பாளரையே களமிறக்கி வருகின்றனர்.
“மலாய்க்காரர் பெரும்பான்மையாக வாழும் அத்தொகுதியில் மலாய் வேட்பாளர் போட்டியிடுவதையே அங்குள்ளவர்கள் விரும்புவார்கள். அதனால் மசீச-வுடன் ஒப்பிடும்போது அம்னோ அங்கு வெற்றிபெறும் வாய்ப்பே அதிகம்.
“கடந்த ஐந்து தேர்தல்களில் அத்தொகுதி மசீசவுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் அது தோற்றுப்போனது”, என்றாரவர்.