பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் அதேசமயம், பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற விரும்பும் ஆசிரியர்களை, கல்வி அமைச்சர் மஹ்ட்ஷீர் காலிட் குறைகூறினார்.
“ஒன்றிரண்டு பேர் பிரச்சனையில் உள்ளனர். ஹராப்பானை, பெர்சத்துவை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். அவர்களின் (ஹராப்பான்) ஆடையை அணிந்து, அதன் கீழே எழுதுகின்றனர் (சமூக ஊடகங்களில்).
“பின்னர், தேசியக் கல்வி தலைமைத்துவத் தகுதி திட்டத்தில் (என்.பி.கியு.இ.எல்.) இணைகின்றனர்.
“என்.பி.கியு.இ.எல். தலைமை ஆசிரியர் ஆவதற்குத் தேவையான தகுதி, அரசாங்கத்துடன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று, இன்று கெடா, பாலிங்கில் ஒரு நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறியதாக, சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்கக்கூடாது என்று மஹ்ட்ஷீர் காலிட் வலியுறுத்தியுள்ளார்.
“உங்களுக்குப் பதவி வேண்டும், அதேநேரம் நீங்கள் ஆதரிக்கின்றீர்கள், காட்டிக் கொள்கிறீர்கள், அடிக்கிறீர்கள், அதை மிகைப்படுத்தாதீர்கள். ஒரு சிலர்தான் என்றாலும், அது ஒரு கொசு காதோரம் ரீங்காரமிடுவதைப் போன்றது,” என்று அவர் கூறினார்.