செய்திகள் : நாடாளுமன்றம் மார்ச் இறுதியில் கலைக்கப்படலாம்

பிரதமர்    நஜிப்  அப்துல்   ரசாக்,   மார்ச்  இறுதியில்    அல்லது  ஏப்ரல்  தொடக்கத்தில்   நாடாளுமன்றத்தைக்  கலைக்கக்கூடும்    என   நியு  ஸ்ரேய்ட்ஸ்    டைம்சும்   பெரித்தா   ஹரியானும்   கூறியுள்ளன.

புதிய  தேர்தல்   தொகுதி   எல்லைகள்   மீதான    தீர்மானம்   மார்ச்  26க்கும்  மார்ச்  29க்குமிடையில்    மக்களவையில்   தாக்கல்    செய்யப்படலாம்    என்று    கூறப்படுவதை   வைத்து    அவ்வாறு   அனுமானிக்கப்படுகிறது.

முன்பு   அத்தீர்மானத்தை    மார்ச்  29-இல்   தாக்கல்    செய்வதாக   இருந்தது. ஆனால்  தேர்தலுக்கான   ஆயத்தப்  பணிகள்  “இறுதிக்   கட்டத்தை   அடைந்திருப்பதால்”   அத்தீர்மானத்தை   முன்கூட்டியே   தாக்கல்    செய்ய   முடிவாகியுள்ளது.

நஜிப்பே   தீர்மானத்தை   முதல்   வாசிப்புக்குத்   தாக்கல்    செய்வார்    என்றும்  அச்செய்திகள்   கூறின.

தேர்தல்  தொகுதிச்  சீரமைப்பு   பிஎன்னுக்குச்   சாதகமாக    அமைந்திருப்பதாய்   விமர்சகர்கள்   கூறியுள்ளனர்.