முன்னாள் நிதி அமைச்சர் II அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் ஆறாவது தடவையாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றும் ஆருடங்கள் கூறப்படுவுதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.
2016 ஜூனில் அமைச்சர் பதவியையும் அம்னோ உறுப்பினர் பதவியையும் துறந்து சென்ற ஹுஸ்னி மீண்டுக் அரசியலுக்குத் திரும்பி வருவதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் விரும்புவதாக அச்செய்தி கூறிற்று.
அந்த 66-வயது மனிதர் நஜிப் உயர்வாக மதிக்கும் அம்னோ அரசியல்வாதிகளில் ஒருவராம். பிஎன் வட்டாரமொன்று தெரிவித்ததாக அது கூறியது.
முன்னாள் அம்னோ தலைமைப் பொருளாளரான ஹுஸ்னி 2009 ஏப்ரலில், நஜிப் பிரதமரானதும் இரண்டாம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2016 அக்டோபரில் நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது சர்ச்சைக்குரிய 1எம்டிபி தேவைதானா என்றவர் கேள்வி எழுப்பிப் பரபரப்பூட்டினார். எட்டு மாதங்களுக்குப் பின்னர் பதவி விலகினார்.