இவ்வார இறுதியில் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல், பிரதமர் நஜிப் ரசாக்கைச் சந்திக்காமல், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென டாக்டர் மகாதீர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் சர்வதேச தலைவர்களுடன் சேர்ந்து படங்கள் எடுத்துகொண்டு, தனது தரத்தை உயர்த்தி காட்ட அடிக்கடி வாய்ப்புகளைத் தேடுகிறார், எனவே அவருடன் ஒத்துழைக்க வேண்டாம் என கூறினார்.
“தனக்கு உலக அரங்கில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது போல் மலேசியர்களிடம் காட்டிக்கொள்ள அவர் இதனைச் செய்கிறார்,” எனவும் மகாதீர் கூறினார்.
“ஆனால் அவர் ஒரு திருடன் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் (டர்ன்பல்) அவரிடம் (நஜிப்) இருந்து தூர விலகி இருக்க வேண்டும்,” 1எம்டிபி ஊழலில் அவருக்குத் தொடர்பு இருப்பதால் அவரைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம், ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டின் இறுதியில், 1எம்டிபி ஊழல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமென மகாதீர் கூறியதாக ‘தி ஆஸ்திரேலியன்’ செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், 1எம்டிபி ஊழலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என நஜிப் கூறிவருகிறார். அதோடுமட்டுமின்றி, அட்டர்னி ஜெனரல் முகமட் அஃபெண்டி அலியும் நஜிப் தூய்மையானவர் என்று, அந்த ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அவரை நீக்கியுள்ளார்.