டாக்டர் மகாதிர் முகமது, பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை, பிரதமர் நஜிப் மீண்டும் சர்ச்சையாக்கினார்.
உலகில் எந்த நாடும், பக்காத்தான் ஹராப்பான் செய்ததைப் போல, 93 வயதான ஒருவரை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்காது என நஜிப் கூறினார்.
“ஒரு முதியவரை அரசாங்கத் தலைவராக எந்த நாடும் தேர்வு செய்யுமா? இல்லை. நாம் அவ்வாறு செய்தோமானால், அரசாங்கத்தின் தலைவராக 93 வயதான ஒருவரை நியமித்த, முதலாவது நாடாக உலகில் விளங்குவோம், ஆனால் நமக்கு மற்ற தேர்வுகள் இருக்கவே செய்கிறது.
“நாம் மலேசியாவின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும், மலேசியாவின் எதிர்காலம் 93 வயதான ஒருவரின் கைகளில் இல்லை, அது தற்போதைய அரசாங்கத்தின் கைகளில் உள்ளது,” என நஜிப் குறிப்பிட்டதாக உத்துசான் ஓன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில், ஹராப்பான் மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அப்போது செய்தியாளர் ஒருவர், மகாதீரையும் 92 வயதில் பதவி விலகிய ஜிம்பாவே பிரதமர் ரோபர்ட் முகாபேவையும் ஒப்பீடு செய்தார்.
“நான் நிச்சயமாக அவரை (முகாபே) போன்றுதான்.
“(ஆனால்) அவர் பதவி விலகவில்லை. நான் தவறு செய்துவிட்டேன், நான் பதவி விலகிவிட்டேன்,” என்றார் மகாதீர்