இன்று மலேசியா எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் காரணம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் என பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கூறியுள்ளார்.
அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிடாமல், இன்றையப் பொருளாதார பிரச்சனைகளுக்கு, 80-களில் இருந்து நாட்டை ஆண்ட தலைவர்கள்தான் காரணம் என்றார் அவர்.
“நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினைகள், அது அரசாங்கம் ஆனாலும் சரி அல்லது மக்களாக இருந்தாலும் சரி, அவை இன்று பக்காத்தான் ஹராப்பானில் உட்கார்ந்திருக்கும் தலைவர்களால் உருவானது.
ஹாடி, 1981-ல் இருந்து 2003 வரை நாட்டின் பிரதமராக இருந்த, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதிரைக் குறிப்பிடுகிறார் என்று நம்பப்படுகிறது.
இந்தப் பிரச்சனைகள் தீர, அரசாங்கத்திற்குப் பாஸ் ஆலோசனை வழங்க தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“நாம் அரசாங்கம் அமைத்தால், அதனை செயல்படுத்தலாம்.
“நாம் அரசாங்கத்தை அமைக்கவில்லை என்றால், தற்போதய பக்காத்தான் தலைவர்கள் செய்த தவறுகளைத் திருத்தியமைக்க, அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதுதான் அரசியல் என என்னத்தில் தோன்றுகிறது. மிகவும் புத்திசாலியாக அறிக்கை விடுகிறார். அன்று நாடு பொருளாதார பிரச்சினைக்கு காரணம் ஜோர்ஜ் சோரோஸ் என்ற நபர். பங்கு பரிவர்த்தனை மூலம் (South Asia) இருக்கும் நாடுகள் அவரின் தகாத ஆதிக்கம் நம் நாட்டையும் ஆட்டி படைத்தது. அந்த நேரத்தில் அந்த முன்னாள் பிரதமர் எடுத்த தைரியம்மான முடிவினால். நாம் காப்பாற்ற பட்டோம். அதாவது நம்முடைய நானயத்தை அமெரிக்க நானயத்தை கட்டு படுத்த அதற்கு ஈடாக ஒரே நிலையில் இருக்க தக்கவைத்து உலக அரங்கில் அதிர்ச்சி அலையை உருவாக்கினர். அந்த நேரத்தில் மற்ற நமது சகோதர ஒரு சில நாடுகள் உலக வங்கியிள் கடனுதவி பெற்ற பொழுது நம் நாடு தனித்து நின்று வெற்றியும் அடைந்தது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் மாக இருந்து திறம்பட நாட்டை காப்பாற் றினர் முன்னாள் பிரதமர். உலகமே நம்மை பார்த்து வியந்தது.
இந்த புதிய கண்டுப்பிடிப்புக்காக இவருக்கு அரசியல் பிரிவில் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம்.
இன்னொருவரின் வேதனை ..
இவர்களுக்கு வேடிக்கை ..
இதயமற்ற மனிதருக்கு ..
இதுவெல்லாம் வாடிக்கை ….
எத்தனை பெரிய மனிதருக்கு
எத்தனை சிறிய அறிவிற்கு