இன்று சிட்னியில், ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட நஜிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெர்சே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னி, பெர்சே இயக்கத்தின் செயலாளர் ஜேசன் கோ, மஞ்சள் நிற டீ-சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசியான் முழுவதையும் சார்ந்த பல்வேறு மனித உரிமை பிரச்சனைகளில் தொடர்புடையவர்கள் என்று கூறினார்.
“நாங்கள் மலேசியாவைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினர், இன்று சிட்னியில் ஆசியான் மாநாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
“சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர், ஆசியானைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாங்கள்,” என்றார் கோ.
இந்த ஆர்ப்பாட்டம், சிட்னி டவுன் ஹால் ஸ்குவேர் மற்றும் ஹைட் பார்க் என இரண்டு இடங்களில் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
மலேசியாவில் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை வலியுறுத்தியதோடு, வியட்னாம் ரோஹின்யா பிரச்சனைக் குறித்தும் அவர்கள் குரல் எழுப்பியதாக கோ கூறினார்.
இன்று, ஆசியான் – ஆஸ்திரேலியா உச்சநிலை மாநாடு 2018, சிட்னி அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது.
1எம்டிபி ஊழலில், சர்வதேசக் கவனத்தை ஈர்த்த நஜிப், உச்சநிலை மாநாட்டின் இறுதி நாளில், பிரதான நிகழ்வாக ‘வன்முறை எதிர்ப்பு’ குறித்து முக்கிய உரையாற்ற உள்ளார்.