லெம்பா பந்தாய் வாக்காளர்களின் முகவரி மாற்ற விண்ணப்பப் படிவங்கள் இசி-இடம் உள்ளன

தங்களுக்குத்    தெரியாமலேயே    தங்களின்   வாக்களிக்கும்   முகவரிகள்   மாற்றப்பட்டிருப்பதாகக்   கூறிக்கொள்ளும்    நான்கு   வாக்காளர்களும் ,      முகவரி    மாற்றத்துக்காக     விண்ணப்பம்   செய்துகொண்ட   விண்ணப்பப்  படிவங்கள்    தேர்தல்    ஆணைய (இசி)த்திடம்
உள்ளனவாம்

இதை  உறுதிப்படுத்திய   இசி   தலைவர்  முகம்மட்  ஹாஷிம்   அப்துல்லா,  வாக்காளர்   பற்றிய   தகவல்களில்   மாற்றம்   செய்வதற்கு   போராங்  ஏ  பாரங்களைப்  பயன்படுத்த  வேண்டும்   என்றார்.

“இந்த   விவகாரத்தில்   ஏ  போராங்குகளை  இசி    சரிபார்த்ததில்     சம்பந்தப்பட்ட    தரப்புகள்  அப்பாரங்களைப்  பூர்த்தி    செய்துள்ளது   கண்டுபிடிக்கப்பட்டது.

“இப்போதைய   நிலையில்   தாங்கள்    விண்ணப்பம்   செய்யவில்லை,   தங்களுக்குத்   தெரியாமலேயே   வாக்களிக்கும்    தொகுதி   மாற்றப்பட்டுள்ளது  போன்ற   அவர்களின்   குற்றச்சாடுகளுக்கு   இசி  விளக்கமளிக்க  வேண்டிய   அவசியமில்லை.  ஏனென்றால்  போலீசில்   புகார்    செய்யப்பட்டிருக்கிறது”,  என்றாரவர்.

போலீஸ்  விசாரிக்கட்டும்.   விசாரணைக்கு    இசி   முழு  ஒத்துழைப்பு  கொடுக்கும் என  ஹாஷிம்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.
.