சிஎம்: முன்னொரு காலத்தில் சீனா மலாக்காவைப் பாதுகாக்கவில்லையா, இப்போது மட்டும் ஏன் இந்த ஆர்ப்பரிப்பு?

சீனா,  மலாக்காவில்   நிறைய   முதலீடுகளைச்   செய்து   அம்மாநிலத்தைத்  தனது  காலனியாக்கிக்கொள்ள   முயலுகிறது    என்று  கூறப்படுவதை   மறுதலிக்கிறார்  மலாக்கா   முதலமைச்சர்   இட்ரிஸ்   ஹருன்.

காலனியாக்குவது   அதன்  நோக்கம்   என்றால்   நீண்ட  காலத்துக்கு  முன்பே   அதைச்  செய்திருக்கும்     என்றாரவர்.

“சீனாவின்    முதலீட்டாளர்கள்   மலாக்காவைக்   காலனியாக்கிக்  கொள்ள  விரும்புவதாகக்  கூறுவோரிடம்   சொல்லுங்கள்,  மலாக்காவைக்  காலனியாக்க   சீனா  விரும்பியிருந்தால்  600ஆண்டுகளுக்கு   முன்பே    அதைச்   செய்திருக்கும்   என்று.

“கடல்படைத்   தலைவர்  செங்  ஹோ  ஆயிரம்  கப்பல்களுடனும்   120,000   வீரர்களுடனும்   வந்தார்.  வந்தவர்   சயாமிடமிருந்தும்  மஜாபாஹிட்   அரசிடமிருந்தும்  மலாக்காவைப்   பாதுகாத்தார்”,  என  இட்ரிஸ்   நேற்றிரவு  அலோர்  காஜாவில்   சீனப்  புத்தாண்டு   திறந்த  இல்ல  உபசரிப்பு  ஒன்றில்  கூறினார்.

அண்மைய   ஆண்டுகளாய்   சீனாவிலிருந்து  நிறைய   முதலீடு    மலாக்காவுக்கு   வந்துள்ளது.மலாக்காவில்  சீன   முதலீட்டாளர்கள்  முதலீடு   செய்துள்ள  திட்டங்களில்    ரிம43பில்லியன்  மலாக்கா   கேட்வேயும்   ஒன்று.