பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிஎன்னை எதிர்ப்பதில் வெளிநாட்டவர் உதவியை நாடும் எதிர்க்கட்சிகளைக் கோழைகள் என்று சாடினார்.
எந்தப் பெயரையும் அவர் கூறவில்லை என்றாலும் பக்கத்தான் ஹரப்பானைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடைமலை.
“பெருமைக்காகக் கூறவில்லை, நாங்கள் வெற்றி பெற்றால், மாற்றங்களைக் கொண்டு வருவோம், வெற்றி பெறாவிட்டால் அரசாங்கத்துக்கு ஆலோசகர்களாக மாறி மாற்றங்களைக் கொண்டுவரச் செய்வோம்.
“நமது அரசியல் விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளை அழைக்க மாட்டோம்.
“சில தரப்புகள் துணிச்சலாக செயல்படுவதாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், அதில் துணிச்சல் இல்லை. அந்நியர்களை, அந்நிய ஊடகங்களை, அந்நிய கட்சிகளை அழைத்து அவர்களின் உதவியுடன் பிஎன்னை எதிர்க்க விரும்புகிறார்கள்”, என்று ஹாடி நேற்றிரவு சிலாங்கூரில் பக்கத்தான் ரக்யாட்- பக்கத்தான் ரக்யாட் பத்தாமாண்டு ஆட்சியைக் கொண்டாடும் விழாவில் உரையாற்றியபோது கூறினார்.
மேல்விவரம் எதையும் ஹாடி கூறவில்லை. ஆனால், 1எம்டிபிமீது உலகளவில் காட்டப்படும் கவனிப்பை அன்னிய தலையீடு என்று கூறும் பாஸ் அதற்குக் கண்டனம் தெரிவிப்பதில் அதன் முன்னாள் எதிரியான அம்னோவுடன் சேர்ந்துகொண்டுள்ளது.
அந்நிய நாட்டின் சக்திகளிடம் இருந்து 2 .6 பில்லியன் நிதியை தனது சொந்த வங்கி கணக்கில் சேர்த்து கொண்ட பொழுது , வாயில் என்ன வாழை பழமா வைத்திருந்தீர்கள் ? அந்நிய சக்தி லாபம் இல்லாமல் அவ்வளவு பெரிய தொகையை தருமா ? இதை கேட்க தைரியம் இல்லை ஆனால் ஊழல் பேர்விழிகளை அமெரிக்க பந்தாடும் பொழுது , அதன் மீது அபாண்ட பழி சுமத்துவது கடவுளுக்கே பொறுக்காது !