பாஸ் துணைத் தலைவர்: எதிரிகளின் தோல்விக்காக வேண்டிக்கொள்வவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை

பாஸ்    துணைத்     தலைவர்     துவான்    இப்ராகிம்    துவான்   மான்    கடந்த   சனிக்கிழமை    நடந்த   சிலாங்கூர்    பாஸ்  கட்சிக்   கூட்டத்தில்  “தீய  பக்கத்தானின்”   அழிவுக்காக  பிரார்த்தனை   நடத்தியது   தவறில்லை   என்று   தற்காத்துப்   பேசினார்.

விமர்சகர்கள்   அதைத்   திரித்துக்  கூறித்    தவறு   என்று    காண்பிக்க    முயன்றிருக்கிறார்கள்   என்று  துவான்   இப்ராகிம்  கூறிக்கொண்டார்.

“ஒரு  தொழுகையின்போது  நம்  வெற்றிக்கும்    எதிரிகளின்  தோல்விக்கும்   வேண்டிக்கொள்வது   இயல்பான   ஒன்றுதான்.

“இது  ஒரு   பிரச்னை   அல்ல”,  என்றாரவர்.  துவான்   இப்ராகிம்   நேற்றிரவு   சைபர்ஜெயாவில்  பாஸ்    தலைமையிலான   ககாசான்   செஜாத்ராவின்   தேர்தல்  கொள்கை    அறிக்கையை   வெளியிட்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்   பேசினார்.