வாக்காளர் பட்டியலில் 949 இராணுவ வாக்காளர்களையும் அவர்களின் துணைகளையும் சேர்த்துக்கொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி டிஏபியையும் அமனாவையும் சேர்ந்த 48 வாக்காளர்கள் செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
949 இராணுவ வாக்காளர்களின் பெயர்களும் அரசிதழில்
தேர்தல் ஆணைய(இசி)த்தால் வெளியிடப்பட்டு விட்டன என்பதால் இனி அதை நீதிமன்றம் விசாரிக்க இயலாது என நீதிபதி கமாலுடின் முகம்மட் சைட் தீர்ப்பளித்தார்.
“ நீதிபதி தேர்தல் சட்டம் பிரிவு 9ஏ-யைச் சுட்டிக்காட்டினார். அச்சட்டப் பிரிவு ஒரு பெயர் அரசிதழில் இடம்பெற்று விட்டால் பிறகு அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்ட விசயமாகாது என்கிறது”, என மனுதாரர்களின் வழக்குரைஞர் மிச்சல் இங் கூறினார்.