எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) 4 நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அம்னோ வேட்பாளர்களின் தொடர் பிரச்சாரத்தால், மசீச-வுக்கான இடங்கள் 36-ஆக குறைக்கப்படலாம் என்று தெரிகின்றது.
2008-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், மசீசவுக்கு 40 நாடாளுமன்றங்கள் கொடுக்கப்பட்டன.
2013-ல், குவாந்தான், கேலாங் பாத்தா, வங்சா மாஜூ ஆகிய 3 நாடாளுமன்றங்களை மசீச, அம்னோவுக்கு இரவல் தந்தது, அவ்விடங்களில் அம்னோ வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற நம்பிக்கையில்.
இம்முறை, கேலாங் பாத்தாவில் போட்டியிட அம்னோ ஆர்வம் காட்டவில்லை என்றாலும், குவாந்தான் மற்றும் வங்சா மாஜூ நாடாளுமன்றங்களில் போட்டியிட இரு கட்சிகளும் விரும்புகின்றன.
பல காரணங்களுக்காக, பண்டார் துன் ரசாக் மற்றும் லுமூட் தொகுதிகளையும் மசீச அம்னோவுக்கு விட்டுத்தர வேண்டுமென்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த 4 தொகுதிகளிலும் பல்லின வாக்காளர்கள் உள்ளனர், மலாய்க்காரர்கள் குறிந்த அளவிலேயே வசிக்கின்றனர். 2013-ல், அந்த 4 தொகுதிகளையும் பிகேஆர் வென்றது.
சில வருடங்களாக, குறிப்பாக 2013-ல் மசீசவின் மோசமான செயல்திறனால், மசீசவின் பாரம்பரிய இடங்களை அம்னோ எடுத்துக்கொண்டது.
அந்நேரத்தில், மசீச 7 நாடாளுமன்றங்களை மட்டுமே வென்றது.
அது அவர்களுக்கு இழப்பல்ல! 4 நாற்காலிகளைக் கொடுத்து அவர்கள் 400 வியாபார லைசென்ஸ்களை வாங்கி விடுவார்கள்!