1எம்டிபி தொடர்பான புகார்களை, சுவிட்சர்லாந்து திருத்தியமைக்கிறது

சுவிஸ் நீதிமன்றம், பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் எரிசக்தி குழுவின் முன்னாள் இயக்குனரும், 1எம்டிபி ஊழலில் முக்கிய நபருமான சேவியர் ஜஸ்டோ,  தனது முன்னாள் சக ஊழியர்களும் தனது சகாக்களுமான இருவர் மீது பதிவு செய்த குற்றப் புகார்களை மீளாய்வு செய்யவுள்ளது.

2009-ஆம் ஆண்டு முதல் 2012 வரை, ஆற்றல் தொழிற்துறையில் ஒத்துழைத்து வந்த தனது முன்னாள் முதலாளியை, 1எம்டிபி தொடர்பில் அச்சுறுத்தியதற்காக தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்ட அவரது கெட்டப்பெயரை, அழிக்க முயற்சிப்பதாக ஜஸ்டோ ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.

பெட்ரோசவுடி நிறுவனத்திடம் இருந்து ஜஸ்டோ பணத்தைக் கோரியதோடு, கொடுக்க மறுத்தால் அந்நிறுவனத்தின் தகவல்களைப் பொதுவில் அறிவிக்கப்போவதாக மிரட்டியதன் விளைவால், அவர்மீது மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்தது.

புகார்தாரர் அல்லாத பெட்ரோசவுடி, தனது வழக்குரைஞர்கள் மூலம், ‘அவரது சொந்த தவறுகளிலிருந்து பிறர் கவனத்தைத் திசை திருப்பவே’ அவர் இவ்வாறு முயற்சிக்கிறார் எனப் பதிலளித்தது.

2011-ல், பெட்ரோசவுடியில் இருந்து விலகிய பின்னர், ஜஸ்டோ வெளியிட்ட ஆவணங்களினால், 1எம்டிபி நிதியிலிருந்து சொத்துக்கள் திருடப்படுவதாக குறைந்தது ஆறு நாடுகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

  • ராய்ட்டர்ஸ்