வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்றால் 93-வயதை நெருங்கும் டாக்டர் மகாதிர் முகம்மட் உலகின் முதிய தலைவராகி விடுவார்.
இப்போது உலகின் மிக மூத்த தலைவராக இருப்பவர் கியூபாவின் ரவுல் கேஸ்ட்ரோ. ஜூன் மாதத்தில் அவருக்கு 87 வயதாகும்.
மகாதிர் நாட்டின் பிரதமரானால் வயதான காலத்தில் அவரால் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு விடைகாண மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. ”பிரதமர் ஆக முடியாத அளவுக்கு மகாதிருக்கு வயதாகி விட்டதா?” என்ற தலைப்பில் இன்று மாலை கருத்தரங்கு நடைபெறுகிறது.
உடல்நலப் பயிற்றுனர் கெவின் ஸஹ்ரி அப்துல் கப்பார், உளவியலாளர் டாக்டர் மாட் சாஆட் முகம்மட் பாகி, அரசியல் ஆய்வாளர் கமருல் ஜமான் யூசுப் ஆகியோர் அதில் கலந்துகொள்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை மகாதிர் முகநூலில் முதுமை அடைந்து விட்டாலும்கூட தமக்குக் குதிரை ஓட்டத் தெரியும், காரோட்டத் தெரியும், ஏன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தோற்கடிக்கவும் தெரியும் என்று கூறியிருந்தார்.
உலகில் எந்த நாடும் 93-வயது முதியவரைப் பிரதமராக தேர்ந்தெடுக்காது என்று நஜிப் கூறியிருந்ததற்கு மகாதிர் அவ்வாறு பதிலடி கொடுத்திருந்தார்.
“நான் நினைக்கிறேன், இந்த வயதானவனைக் கண்டு நஜிப்பு மிகவும் பயப்படுகிறார் என்று. அதனால்தான் என் கட்சியைப் பதிவுரத்து செய்து நான் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கப் பார்க்கிறார்.
“ஆமாம், எனக்கு வயதாகி விட்டதுதான், ஆனால், நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதைப் பார்ப்போம்”, என ஜூலை 10-இல் 93வயதாகும் மகாதிர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மைதானே, வயதான காலத்தில் சந்தோசம்தானே தேவை. இந்த வயதில் ஏன் இத்தனை போராட்டம். இளம் வயது உள்ள தலைவர்கள் இன்று அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் ஒரு ஆலோசகராக இருக்கலாம். அதில் உங்களை போன்றவர்கள் மிக்க உறுதுணையாக இருக்கலாம். இன்று நீங்கள் ஒரு திறமையான முன்னால் பிரதமர் என உலகம் போற்றும் அளவு செல்வாக்கு பெயர் புகழ் என வாழ்கிறிர்கள். இனியும் தேவைதான இந்த வயதான காலத்தில். அந்த புகழே போதும். நடப்பு பிரதமர் உங்களிடம் சவால் விடும் அளவுக்கு அவரின் திறமைகள் வெளிபடுகின்றன. அவரின் தவறுகள் ஒரு புறம் இருந்தாலும் அவர் உங்களிடம் கற்று வந்த பாடம் என்றே தோன்றுகிறது. நமக்கு….
உங்கள் ஆட்சியில் இருந்த துணை பிரதமர்கள் எத்தனை பேர் மாற்றம் கண்டனர். திறமையான சில துணை பிரதமர்கள் பதவியை விட்டு விளக்க பட்டனர். திரு. முசா ஹித்தாம், அனுவார் இப்ராகிம், கபார் பாபா என தலைவர்களை விளக்கிணீர். அவர்களிடம் பிரதமர் பதவியை கொடுது இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். அன்று நீங்கள் ஒரு இரும்பு மனிதர் எனவும் சொன்னார்கள்.
தமிழர்களுக்காக நிறைய கொடுத்தீர்கள். யார் இல்லை என்று சொன்னது. பல திட்டங்கள் நாட்டின் முன்னேற்றம் ஆடைய பல திட்டங்கள். அதில் வெற்றியும் கண்டோம். அதில், அன்று புதியதாக ஒரு திட்டம் கொண்டு வந்து டெக்சி ஓட்டுனர்களை நாள் வாடகை என சொல்லி பல முதலாளிகள் உருவகினிர். அதில் ஒவ்வொர் நிறுவனத்துக்கும் ஆயிரம் பெர்மிட்கள் என கொடுத்து அவர்களை வாழ வைத்தீர்கள். இன்று இருக்கும் பிரதமரோ அதை தலைகிழாக மாற்றி உபெர். கிராப் என மக்கள் வயிற்றில் அடிகிறார்கள். உண்மையாக நீங்கள் மக்களுக்காக சேவைகள் செய்து இருந்தால் பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டை காட்டிலும் பல மடங்கு நம் நாடு முன்னேறி இருக்கும். எல்லாம் லஞ்சம் லஞ்சம் என உருவாகி வந்த அமைச்சர்கள் சொகுசான வாழ்க்கை என எற்றம் காண வைத்து இன்று நல்லவர் போல் பேசுகிறிர்கள். நன்றி
கருத்தரங்கு நடத்தலாம்! ஆனால் நடத்த விடமாட்டார்கள்!