போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது ‘கடைசி நிமிட திடீர்த் தாக்குதல்கள்” நிகழ்த்திக் குழப்பம் விளைவிக்கக் கூடிய சுமார் ஆயிரம் தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் கண்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார்.
தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புதல், ஆவி வாக்காளர்கள், ஐஎஸ் மிரட்டல் என்ற வகையில் அமைந்திருக்கலாம் என்றாரவர்.
பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை என்றும் அவர் சொன்னார்.. தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றாரவர்.
தீவகற்ப மலேசியாவில் 115 இடங்களும் சாபா, சரவாக்கில் 33 இடங்களும் பதற்றமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பூஸி கூறினார்.