பாஸ் துணைத் தலைவர்: எதிரிகள் தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் என்ன தப்பு?
ஹங் துவாபிஜே: பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அவர்களே, சிலாங்கூர் பாஸ் தலைவர் அஹமட் டுசுக்கி அப்ட் ரானி அவர்களே, முஸ்லிமாக மதம் மாறியவன் என்ற முறையில் உங்களுக்கு நம் சமயம் பற்றி ஒன்றிரண்டு கருத்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
1) ஒருவரின் அழிவுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாது. இறைவன் எதிர்மறை தொழுகையை ஒருபோதும் ஏற்க மாட்டான்.
2) எதிரிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி மேம்பட்ட மனிதனாக மாற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்.
இப்போது எனக்குத் தெரிகிறது. உங்களுக்குப் பொருளாதாரம் பற்றி மட்டுமல்ல சமயம் பற்றியும் எதுவும் தெரியவில்லை.
லியோன்: அந்தக் கட்சியில் இருப்பவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்தவர் அழிவுக்காகவா இறைவனிடம் வேண்டுவது.
பெயரிலி: அரசியலில் வெற்றிபெற சேவை செய்து காண்பிக்க வேண்டும். அதன்பின்னர் ஆதரவுக்கு வேண்டிக்கொள்ளலாம்.
ஆனால், இன்னொரு கட்சியின் தோல்விக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வது நீங்கள் உருப்படாதவர் என்பதையும் வெற்றிபெறும் தனமை இல்லாதவர் என்பதையும்தான் காண்பிக்கிறது.
எனவே, பாஸ் ஜிஇ14-இல் போட்டியிடாதிருப்பதே நல்லது என்பேன். தனக்குத் தானே உதவிக்கொள்பவர் எவரோ அவருக்குத்தான் இறைவன் உதவுவான்.
ஹாங் பேபுப்: “எதிரிகள் மண்ணைக் கவ்வ வேண்டும் என்று பிரார்த்திப்பதில் என்ன தப்பு?” என்று வினவுகிறார் துவான் இப்ராகிம்.
சிலருக்கு இது “முதிர்ச்சியடைந்த” அரசியலாக தோன்றலாம். ஆனால் இது சிறுபிள்ளைத்தனமானது.
டேவிட் தாஸ்: சமயத்தை அரசியலுடன் கலக்கக்கூடாது. அந்தத் தவற்றைத்தான் பாஸ் செய்கிறது. முன்பு பாஸ், அம்னோ உறுப்பினர்களை ‘காபிர்கள்’ என்று இகழ்ந்துரைத்தது. அப்படி என்றால் முஸ்லிம்- அல்லாதவர்களை என்னவென்று அழைப்பார்கள்.
இதுதான் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடமுள்ள பிரச்னை. ஹாடி இரட்டை அமைச்சரவை பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா. முஸ்லிம்- அல்லாதார் கொள்கை வகுப்பதில் கலந்துகொள்ள இயலாது.
நல்ல அரசாங்கத்துக்காக வேண்டிக்கொள்வது தவறல்ல. வெற்றிக்காக பிரார்த்திப்பதுகூட தவறில்லை. ஆனால், உங்களை எதிர்ப்போரைத் தீயவர்கள் என்று முத்திரை குத்துவது தவறு.
கெட்டிக்கார வாக்காளன்: பாஸ் உயர்நெறிகளில் நம்பிக்கை கொண்ட கட்சி, ஏழை மக்களுக்கு உதவும் கட்சி என்பது உண்மையானால் பெல்டா, நேசனல் பீட்லோட் கார்ப்பரேஷன், 1எம்டிபி போன்ற விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அந்த ஊழல் விவகாரங்களில் மெளனம் காப்பது அதற்கு உடந்தையாக இருத்தல் போன்றதொரு பாவச் செயலாகும்.