பக்காத்தான் ஹராப்பான் பதிவை இன்னும் செயலாக்க முடியவில்லை என்பதை, மலேசியச் சங்கப் பதிவு இலாகா (ரோஸ்) இன்று உறுதிப்படுத்தியது.
பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான பெர்சத்து, 1966-ஆம் ஆண்டு அமைப்புகள் சட்டம், பிரிவு 14 (2) -ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களையும் ஆவணங்களையும் முறையாக வழங்கவில்லை என்று ‘ரோஸ்’ தலைமை இயக்குநர், சுராயாத்தி இப்ராஹிம் கூறினார்.
“அதனால் எங்களால் ஹராப்பான் பதிவைச் செயல்படுத்த முடியவில்லை,” என்று இன்று ஓர் அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 9-ல், தேவையான ஆவணங்களை முறையாக ஒப்படைக்குமாறு, ரோஸ் பெர்சத்து கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியது.
கடந்தாண்டு ஜூலையில், பக்காத்தான் ஹராப்பான் பதிவுக்காக விண்ணப்பித்தது.
-பெர்னாமா