ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவது பற்றி 1984 ஆம் ஆண்டிலியே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கான “அரசியல் துணிவு” அப்போதைய மத்திய அரசிடம் இல்லை என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.
ஜிஎஸ்டி ஒரு சரியான முடிவு, ஆனால் அது ஓர் அரசியல் விளைவுடன் வந்தது என்று தேசிய உருமாற்றத் திட்டம் ஆண்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் நஜிப் கூறினார்.
எனது நிருவாகம் அந்த அரசியல் விளைவை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை, ஏனென்றால் அது செய்வதற்கான ஒரு நல்ல காரியம். ஜிஎஸ்டி மக்களுக்கும் நாட்டிற்கும் பயன் அளிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று நஜிப் மேலும் கூறினார்.
1984 ஆம் ஆண்டில், மகாதிர் அவரது பிரதமர் பதவியின் மூன்றாவது ஆண்டில் இருந்தார். அப்போது நஜிப், பகாங் மந்திரி பெசாராக இருந்தார்.
தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவராக இருக்கும் மகாதிர், 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரது கூட்டணி வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி வரியை அகற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார்.