உங்கள் கருத்து: சொல்வதைச் சொல்லிவிட்டுப் பிறகு மன்னிப்பு கேட்பது: எம்பி அவர்களே, இது பழைய தந்திரம்

குண்டர்போல்  நடந்து  கொண்டதற்கு  மன்னிப்பு  கேட்க  வேண்டும்: நெகிரி  எம்பிக்கு  பெட்ரியோட்  கோரிக்கை

கவலைகொண்டான்:  நெகிரி   செம்பிலான்  மந்திரி   புசார் (எம்பி)  மாநில  மக்களுக்கு   பேராவமானத்தைக்  கொண்டு  வந்து  விட்டார்.  எவ்வளவோ  மரியாதை   வைத்திருந்தேன்  அவர்மீது.

பெரும்பாலும்   அம்னோ  இளைஞர்கள்   அடங்கிய   கூட்டத்தில்   பேசிய   அவர்   பிஎன்  அரசாங்கத்தை    பழித்துரைக்கும்   கடைகளை   அடித்து  நொறுக்கும்படி  அவர்களைத்   தூண்டிவிடுவதைக்  கேட்டேன். இப்போது  என்னவென்றால்   எல்லாம்  வேடிக்கைப்   பேச்சு  என்கிறார். நம்மை  மடையர்கள்   என்று  நினைத்து  விட்டாரா?

அம்மாநிலத்தில்   ஜிஇ 14க்கு  முன்போ,  பின்போ  ஏதெனும்   வன்செயல்  நிகழ்ந்தால்   அதற்கு   முகம்மட்  பொறுப்பாக்கப்படுவாரா?

சிவப்பு  ஹீரோ: போலீஸ்  புகார்கள்   நிறைய    செய்யப்பட்டு  விட்டன.  ஆனால்,  வன்முறையைத்   தூண்டிவிட்ட  குற்றத்திற்காக   நெகிரி  செம்பிலான்  எம்பிமீது   புலனாய்வு   மேற்கொள்ளப்படும்  என்பதற்கான    அறிகுறியே   இல்லையே.

அதேவேளை,  பினாங்கு    முதலமைச்சர்    லிம்  குவான்   எங்   சிறார்களுடன்   சேர்ந்து   ஜிஎஸ்டி- எதிர்ப்புப்   பாடலைப்  பாடினார்   என்று  விசாரணை  தொடங்கப்பட்டு   நடந்து  வருகிறது.

மார்வின்:  சரியான   காரியம்     செய்தீர்கள்,    பிரிகேடியர்- ஜெனரல்  முகம்மட்  அர்ஷாட்  ராஜி. நெகிரி   செம்பிலான்  எம்பி  கையும்  களவுமாக  பிடிபட்டிருக்கிறார்.

அக்காணொளியைக்   காணும்  எவருக்கும்   அவர்   வன்முறையைத்  தூண்டிவிடுகிறார்   என்பதைச்   சொல்லத்   தேவையில்லை. அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினைப்   பக்கத்தில்   வைத்துக்கொண்டே   அவ்வாறு   பேசியுள்ளார்.

காமிகாசே:  “குண்டர்போல்  நடந்துகொள்ளும்”  இந்த  மந்திரி  புசார்  வன்முறையில்   ஈடுபடுவோரைப்  பிணையில்   வெளியில்   கொண்டு  வருவேன்  என்கிறார்.

இது,  வன்முறையில்  இறங்கும்    குண்டர்களுக்கு   தீங்கு   எதுவும்   நேராது   என்று  உத்தரவாதமளிப்பதுபோல்    அல்லவா இருக்கிறது .

இளைஞர்களை  ஊக்குவிக்க   கடுமையாக  உழைக்கச்  சொல்லும்  சாக்கில்   யாராவது      வன்முறையைத்   தூண்டிவிடுவார்களா?

அர்ஷாட் , முகம்மட்டை க்  கண்டித்தது    சரியே.

அண்மையில்  உள்துறை   அமைச்சர்     ஜிஇ 14-இன்போது  கலவரத்தைத்  தூண்டிவிடக்கூடிய    தரப்புகளைக்  கண்காணித்து    வருவதாகக்   கூறினார். அமைச்சர்    குறிப்பிட்டது    முகம்மடையும்   அவரின்  கையாள்களையுமா .

சோங்: அர்ஷாட்,  மந்திரி  புசாருக்குக்  கண்டனம்   தெரிவித்த   உங்களுக்கு   சல்யூட்   அடிக்கிறேன்.  நம்  தலைவர்கள்    கோப  வார்த்தைகளைக்  கொட்டுவதும்   பிறகு    திரித்துக் கூறப்பட்டு   விட்டது    என்று  புலம்புவதும்   வழக்கம்தானே.

உள்துறை  அமைச்சரும்    14வது   பொதுத்    தேர்தல்   நெருங்கிவரும்  வேளையில்  சினமூட்டும்  பேச்சுகள்   வேண்டாம்    என்று    எச்சரித்துள்ளார்.  ஆனால்,    போலீசார்   அதைப்  பின்பற்றி    நடவடிக்கையில்   இறங்குவார்களா  என்பதைப்  பொறுத்திருந்துதான்  பார்க்க    வேண்டும்.

பெயரிலி 2475091498015598: ஆமாம்,  61  ஆண்டுக்காலமாக   மலேசியாவின்    அரசியல்   அதிகாரத்தைக்  கையில்   வைத்திருப்பதால்   எதையும்   சொல்லும்   ஆணவமும்   துணிச்சலும்   வந்து    விட்டது.

நாடாளுமன்றத்தில்   ஆபாசச்  சொல்களை  வாரி  இறைப்பதில்   பேர்பெற்ற  ஒருவர்   இருக்கிறார். இப்போது   ஒரு  மந்திரி  புசார்.

இதையெல்லாம்   கைரி   பக்கத்தில்   நின்று  பார்த்துக்கொண்டிருந்ததுதான்   வியப்பளிக்கிறது.   இதுதானா   “அக்ஸ்போர்ட்   பட்டதாரி”யின்  இலட்சணம்.

பெயரிலி  243647147641472:  அர்ஷாட்டுகுப்  பாராட்டு.  ஆனால்,  மந்திரி  புசார்  விசாரிக்கப்பட   மாட்டார்   என்பதுதான்   வருத்தம்தரும்   உண்மை.  ஏனென்றால்,   அவர்   தனிச் சலுகைபெற்ற,      சட்டத்துக்கு  அப்பாற்பட்ட  ஒரு   குழுவைச்  சேர்ந்தவர்.

அக்குழுவினர்   தண்டனைப் பயமின்றி   எதை  வேண்டுமானாலும்    சொல்வார்கள்   திருடுதல்,  பணத்தைச்   சலவை   செய்தல்   என்று   எதை வேண்டுமானாலும்      செய்வார்கள்.

அதே   வேளை,   அரசாங்கத்தை  விமர்சிப்பவர்கள்   மென்மையான   சொற்களால்  ஏதாவது   சொன்னால்  போதும்   நீலநிற   சீருடை   அணிந்தவர்கள்   கண்மூடி  திறப்பதற்கு  முன்னால்   அவர்கள்முன்   நிற்பார்கள்.

சான்:  துணிந்து    பேசியதற்கு    நன்றி,  பெட்ரியோட்.   எனக்கு   77-வயது.  பல்லினங்களையும்  பல  வளங்களையும்  பெற்றுள்ள    நம்   நாட்டை  இப்போதைய    தலைவர்கள்   சீரழித்து  வருவதைக்  கண்டு   வந்திருக்கிறேன்.

கெபாப்:   உள்துணை   அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடியும்  இன்ஸ்பெக்டர்-  ஜெனரல்  அப்  போலீஸ்  பூஸி  ஹருனும்   ஜிஇ14இன்போது   குழப்பம்  விளைவிக்கக்   கூடியவர்களை    அடையாளம்   கண்டிருப்பதாகக்  கூறியுள்ளனர்.

மொத்தம்  1100  பேர்   என்று     ஐஜிபி   அவர்களின்   எண்ணிக்கையையும்   குறிப்பிட்டார்.  அந்தப்  பட்டியலில்   இந்தக்   கூட்டத்தில்  இருந்தவர்களின்  ஒருவரின்  பெயர்கூட   இருக்காது    என்று   அடித்துக்   கூறுவேன். யாருக்காவது  மறுக்கும்   துணிச்சல்  இருக்கிறதா?