போலீஸ்காரர்கள் அரசாங்கத்தின் கையாள்கள் என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப், அவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றார்.
சிலர் போலீசார் அரசாங்கத்தின் கையாள்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அது வருத்தத்திற்குரியது என்று கூறிய நஜிப், போலீசார் பெறும் சம்பளத்திற்கு அவர்கள் எதுவுமே செய்வதில்லை என்பதோடு குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்றும் கூறப்படுகிறது என்றார்.
இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மன்றத்தில் 211 ஆவது போலீஸ் தினம் நிகழ்ச்சியில் இன்று காலையில் பேசுகையில் நஜிப் கூறினார்.
கை ஆட்கள் என்று யார் சொன்னது? அம்னோ குண்டர்கள் அல்லவா?