எதிரணி வென்றால், பெல்டா குடியேறிகள் கடும் விளைவுகளுக்கு ஆளாவர், நஜிப் கூறிகிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பெல்டா குடியேறிகள் அவர்களுடைய செம்பனை அறுவடைகளை விற்பனை செய்வதில் பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரதமர் நஜிப் அவர்களிடம் கூறினார்.

அதுமட்டுமல்ல, இது தேசிய பொருளாதாரத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாரவர்.

இதுதான் நிகழும், ஏனென்றால் எதிரணியினர் வெற்றி பெற்றால் அவர்கள் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் அனைத்து கூட்டு ஒப்பந்தங்களையும் இரத்து செய்யப் போவதாக கூறியுள்ளனர் என்று நஜிப் தெரிவித்தார்.

பொருளாதார வல்லரசுகளான சீனா, இந்தியா மற்றும் இதர நாடுகளுடன் நல்லறுவைப் பேணுவது அரசாங்கத்தின் கொள்கை, ஏனென்றால் அந்நாடுகள் பெல்டா குடியேறிகள் உறுபத்தி செய்யும் செம்பனை எண்ணெயை வாங்குகின்றன.

சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஒப்பந்தங்களை இரத்து செய்து விட்டால், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் படுவீழ்ச்சி அடையும். அதனால் பாதிக்கப்படப் போவது அவர்கள் (எதிரணியினர்) அல்ல. பெல்டா மக்கள்தான் பாதிப்புக்குள்ளாவர் என்று பெல்டா லெப்பார் ஹிலிர் 1 லுள்ள பாயா பெசார் பகுதி மக்களுடனான நிகழ்ச்சியில் நஜிப் கூறினார்.

பகாங் மந்திரி பெசார் அட்னான் யாக்கோப் மற்றும் பாயா பெசார் அம்னோ தொகுதி இடைக்கால தலைவர் முகமட் சோகைமி முகமட் ஷா ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் இருந்தனர்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தவிர, மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப் பெரிய நாடு சீனா என்று கூறிய நஜிப், இவ்வளவு காலமாக பிஎன் அரசாங்கத்தின் மிக வலுவான ஆதரவாளராக இருந்து வந்த பெல்டா குடியேறிகள் 14 ஆவது பொதுத் தேர்தல் சரியான தேர்வைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.