போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும்

 

போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா மக்களவையில் முதல் வாசிப்புக்காக நாளை தாக்கல் செய்யப்படும்.

போலியான செய்திக்கு எதிர்ப்புச் சட்டம் இயற்றும் கருத்தை சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்னான் சைட் கடந்த ஜனவரியில் வெளியிட்டார். அதற்காக புத்ரா ஜெயா ஒரு சிறப்புக் குழுவை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போலியான செய்தி பற்றிய பிரச்சனை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசிக்கப்படும், ஏனென்றால் அவ்வாறான செய்தியால் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் நாட்டின் பாதுகாப்புக்கும் பாதகமாக இருக்கும் என்றாரவர்.

ஆனால், முன்மொழிப்பட்டிருக்கும் இச்சட்டம் அரசாங்கத்தை குறைகூறுபவர்களை, 1எம்டிபி விவகாரம் உட்பட, அடக்குவதற்கான ஒன்று என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கு/ற்றச்சாட்டுகளை புத்ரா ஜெயா மறுத்துள்ளதோடு முன்மொழிப்பட்டுள்ள இச்சட்டத்தை மீண்டும் மீண்டும் தற்காத்து வருகிறது.