1எம்டிபி பிரச்சனையில், பாஸ்-இன் நடுநிலைமை, அது குற்றத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் இல்லை, என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
தவறு என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, யாரையும் தண்டிக்க கட்சி விரும்பவில்லை என்பதால் பாஸ் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளது என்று அவர் சொன்னார்.
“இந்த நடுநிலை, பாஸ் மோசமான தோழர்களைப் பாதுகாப்பதாக அர்த்தமில்லை, ஆனால் குற்றச்சாட்டுகள் மிகவும் பரிபூரணமாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்று (நிரூபிக்கப்படு முன்) கருதப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறியதாக இன்று ‘சினார் ஹரியான்’ மேற்கோள் காட்டியுள்ளது.
குற்றம் சுமத்துபவரின் தவறுகளையும் மறக்க வேண்டாம் என, ஹாடி மக்களைக் கேட்டுக்கொண்டதாகவும் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிக பெரிய ஊழலில் 1MBD kleptocracy யில் நடுத்தரமாக சிந்திக்கும் தாங்கள், உலகத்திலேயே மிக பழமையான இஸ்ரேல் – பாலஸ்தீனியர்களின் கருத்து வேறுபாடுகளில் அப்படி செய்ய விலையே ? நமக்கு வந்தா சட்னியா ? அவனுக்கு வந்தாதான் ரத்தமா ?