பொய்செய்தித் தடுப்புச் சட்டம் என்பது மற்றொரு அடக்குமுறை கருவி என்கிறார் மலேசியாகினி தலைமைச் செய்தியாசிரியார் ஸ்டீபன் கான்.
மலேசியாகினியை அதன் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனுடன் கூட்டாக நிறுவியவரான கான், ‘1984’ நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
“ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார், ‘சுதந்திரம் என்றால் இரண்டும் இரண்டும்
நான்கு என்று சொல்லும் சுதந்திரம் வேண்டும்’ என்று. மலேசியர்கள் அந்தச் சுதந்திரத்தையும் இழக்கும் நிலையில் உள்ளனர்.
“மலேசியாவில் பொய்ச் செய்திகளை எதிர்க்க வண்டி வண்டியாக சட்டங்கள் உண்டு. இப்புதிய சட்டம் அரசாங்கத்தின் இன்னொரு கட்டுப்பாட்டுச் சட்டம் என்பதற்கும் மேலே, இது நொந்து நூலாகியுள்ள ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கிறது.
“அரசாங்கம் எதைப் பொய்ச் செய்தி என்கிறதோ அதுதான் பொய்ச் செய்தி. இரண்டும் இரண்டும் நான்கல்ல என்று அரசாங்கம் சொன்னால் அதுதான் சரி”, என்றார்.
பிரமேஷும் இது ஊடகங்களையும் பேச்சுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் முயற்சி என்று சாடினார்.
“கான் கூறியதுபோல் பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் உள்ளன.
“இது பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்படும் சட்டமாகத் தெரியவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட சட்டமாகத் தெரிகிறது.
“மலேசியாவை முன்னோக்கிக் கொண்டு செல்லப்போவதாகக் கூறிய நிர்வாகம் இப்போது பின்னோக்கிச் செல்ல முற்படுவதக் காண மனம் வருந்துகிறது”, என பிரமேஷ் கூறினார்.
அதற்கென்ன?கொண்டுவரட்டுமே,மக்கள் மனம் வைத்தால் பொய்யா மெய்யா என்று அறிய முடியாதா!!!!!!!
வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் போலியான தகவல்களும் இந்தப் பொய் செய்தி பட்டியலில் அடக்கமா அல்லது அவறுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டா?
நாளிதழ்களில் வெளிவந்த பொய்ச் செய்தியை அதே நாளிதழ் மறுநாள் ‘தவற்றுக்கு வருந்துதுகிறோம்’ என்று மறுப்பு ம் வருத்தமும் தெரிவித்து விட்டால் அவற்றுக்கு மன்னிப்பு உண்டா அல்லது அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?