தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை: தடையை மீறிய ஆய்வாளர் அது அழிவை உண்டாக்கும் என்றார்

அரசியல்  ஆய்வாளர்  வொங்  சின்  ஹுவாட்,   மக்களவையின்     தடையாணையையும்  மீறி   தேர்தல்  ஆணையத்தின்   தேர்தல் தொகுதி  எல்லை  நிர்ணய  அறிக்கையின் உள்ளடக்கத்தை    ஒரு   பொதுக்    கருத்தரங்கில்    வெளியிட்டார்.

“நாட்டுக்காக  சட்டத்தை  மீறப்  போகிறேன்.

“அறிக்கைக்குத்   தடையாணை  போடப்பட்டுள்ளது……ஏனென்றால்   எம்பிகள்   அதன்மீது   வாக்களிப்பதற்குமுன்    அதில்  உள்ள  பலவற்றை   மலேசியர்கள்    அறியக்கூடாது    என்று   இசியும்   அரசாங்கமும்   நினைக்கிறார்கள்  போலும்.

“அதனால்   நான்  தெரிந்துகொண்டதை   வெளியிடுவது   அவசியம்   என்று  நினைக்கிறேன். அந்த   அறிக்கையில்  பரிந்துரைக்கப்பட்டிருப்பது   எவ்வளவு   ஆபத்தானது   என்பதை   மலேசியர்களும்  அறிவது   அவசியம்”,  என்றாரவர்.

இசி  அறிக்கை   NGO Engage’s  வலைத்தளத்தில்  முழுமையாக   வெளியிடப்படும்   என்றும்   அவர்   சொன்னார்.

அந்த  அறிக்கை,  கடந்த   வியாழக்கிழமை  மக்களவையில்   தாக்கல்    செய்யப்பட்டது.  ஆனால்,  அவைத்  தலைவர்   பண்டிகார்  அமின்  மூலியா   அறிக்கையின்  உள்ளடக்கத்தை  வெளியிட    தடை   போட்டார். அந்தத்  தடை  ஆணை  நாளை  முடிவுக்கு   வருகிறது.

தடை  ஆணையை  மீறுவோருக்கு   1952,  நாடாளுமன்றச்  சட்டத்தின்படி   அபராதம்   உண்டு.  வொங்  இன்று   ரிம1,000 அபராதம்  செலுத்த    நாடாளுமன்றம்  செல்லப்  போவதாகத்   தெரிவித்தார்.

“எப்படி  மலேசியத்   தேர்தல்  திருடப்படுகிறது”   என்ற   தலைப்பில்
இன்று  கோலாலும்பூரில்   நடைபெற்ற   அக்கருத்தரங்கில்  இசி  அறிக்கை  குறித்து  விரிவாக  விவாதிக்கப்பட்டது.