ஜோ லோ உல்லாசப் படகை 1எம்டிபி பணத்திலிருந்துதான் வாங்கினார், டிஒஜே கூறுகிறது

 

மலேசியரான ஜோ லோ யுஎஸ்$250 மில்லியன் மதிப்பிலான உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்திலிருந்துதான் வாங்கினார் என்று அமெரிக்க நீதித் துறை மீண்டும் கூறுகிறது.

நேற்று, டிஒஜே மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் 1எம்டிபியிலிருந்து பல பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதில் முக்கியமானவராக இருந்தவர் ஜோ லோ  என்று கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை மலேசியாகினி பார்த்துள்ளது.

இந்த மனு அமெரிக்க அரசாங்கத்தை ஈக்குவானிமிட்டியின் பாதுகாவலராக நியமிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

மேலும், இந்தப் படகை பறிமுதல் செய்யும் நோக்கத்திற்காக அதை அமெரிக்காவிற்கு கொண்டுவருவதற்கு ஜோ லோவின் பிரதிநிதிகள் அப்படகை அரசாங்கப் பாதுகாவலரிடம் ஒப்படைக்கக் கோரும் உத்தரவும் அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.