தாப்பாவில் சரவணனுக்கு எதிராக ரயிஸ் உசேன் களமிறக்கப்படுவாராம்

எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  பெர்சத்துவின்   தலைமை  வியூக  வகுப்பாளர்  ரயிஸ்  உசேன்    தாப்பாவில்  இளைஞர்,   விளையாட்டு   துணை   அமைச்சர்  எம்.சரவணனுக்கு   எதிராகக்   களமிறக்கப்படுவார்.

கட்சி  வட்டாரங்கள்   இதனைத்   தெரிவித்தன.

இதன்   தொடர்பில்   அவர்  நாளை  அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  ஒன்றைச்    செய்வார்   என்று  கூறப்படுகிறது.

மலேசியாகினி   ரயிசைத்   தொடர்பு  கொண்டபோது   அவர்   அச்செய்தியை  உறுதிப்படுத்த  மறுத்தார்.  முடிவைக்  கட்சித்   தலைவர்களிடமே   விட்டுவிடுவதாக  சொன்னார்.

“நான்  தேர்தலில்   போட்டியிடுவதா,  வேண்டாமா   என்பதை   முடிவு  செய்யும்  பொறுப்பைக்  கட்சித்  தலைமையிடமே   விட்டு  விடுகிறேன்.  தாப்பாவில்  நிற்கச்   சொல்கிறார்களா,  நிற்பேன்”,  என்றார்.