MACC ஆதாரத்தின்படி, 1.2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் சம்பந்தப்பட்ட “ஃப்ளை(Fly)” சிண்டிகேட் மீதான MACC விசாரணையில் “டோக் அயா(Tok Ayah)” மற்றும் “டி.கே(DK)” ஆகிய பெயர்கள் முக்கிய மூளையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
“விசாரணையின்போது, சந்தேக நபர் இந்த இரு நபர்களின் பெயரையும் கூறினார். அவர்கள் டோக் அயா மற்றும் டி.கே.யிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதாகக் கூறினர்.
“சந்தேக நபரின் கூற்றுப்படி, டோக் அயா அவர்களின் உயர் அதிகாரி, டி.கே ஒரு செல்வாக்கு மிக்க நபர். எனவே, தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் உணர்ந்தனர்,” என்று வழக்கை அறிந்த ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
DK ஜொகூரிலிருந்து உள்ளூர் தொழிலதிபர் என்றும், “டோக் அயா” அரசு நிறுவனத்தில் மூத்த அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, DK மற்றும் Tok Ayah ஆகியோர் தலைமறைவாக உள்ளவர்கள் என்று மலேசியாகினி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தது.
போலியான முத்திரைகள்
டிசம்பர் 4 அன்று, “ஃப்ளை” சிண்டிகேட் தொடர்பாகக் குடிவரவுத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் ஒரு முகவர் உட்பட நான்கு நபர்களை MACC கைது செய்தது.
இந்தத் திட்டமானது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உடல் இருப்பு இல்லாமல் குடிவரவு வெளியேறுதல் மற்றும் நுழைவு முத்திரைகளைப் பொய்யாக்குவதை உள்ளடக்கியது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அனுமதிப்பத்திரங்களை நிர்வகிக்கும் முகவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஊழல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாகத் திணைக்கள அதிகாரிகள் குற்றம் சுமத்தப்பட்டனர்.
மற்றொரு ஆதாரத்தின்படி, நான்கு நபர்களும் டிசம்பர் 5 முதல் நான்கு நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த வழக்கு இப்போது புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தால் விசாரிக்கப்படுகிறது.
“ஜொகூர் எம்ஏசிசியால் கைதுச் செய்யப்பட்டவர்கள், ஆனால் தலைமையகம் (புத்ராஜெயா) விசாரணையை எடுத்துள்ளது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
“ஃப்ளை” சிண்டிகேட் தவிர, தனிநபர்கள் மருத்துவ விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விசாரணையும் நடத்தப்படுகிறது.
‘ஃப்ளை’ சிண்டிகேட் என்றால் என்ன?
“ஃஃப்ளை” என்பது ஒரு சிண்டிகேட் ஆகும், அதிக காலம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியிருப்பதை நீட்டிக்க அல்லது பொய்யான குடியேற்ற முத்திரைகள்மூலம் தடுப்புப்பட்டியலிலிருந்து அவர்களின் பதிவுகளை “சுத்தம்” செய்ய அனுமதிக்கிறது.
சிண்டிகேட்டின் செயல்பாட்டின் வழிமுறையை ஆதாரம் விவரித்தது:
“ஒரு முகவர் ஒரு நியமிக்கப்பட்ட இடத்தில் காத்திருப்பார். பின்னர், ஒப்புக்கொள்ளப்பட்ட இடத்தில் முகவரைச் சந்திக்க ஒரு துறை அதிகாரி குடிவரவு முத்திரையை எடுத்துச் செல்வார்”.
“அவர்கள் முகவர் கொண்டு வரும் அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் முத்திரையிட்டு, அதற்குப் பதிலாக, ஒரு உறையில் பணத்தைப் பெறுவார்கள். அதிகாரி திரும்பி வந்து, செலுத்தும் தொகையில் தங்கள் பங்கை விநியோகிப்பார்”.
“அயல்நாட்டு பிரஜைகள் அதிகமாகத் தங்கியிருந்தால், 30 நாட்களுக்கு ஒரு புதிய மற்றும் செல்லுபடியாகும் நுழைவு முத்திரை இருக்கும். தடுத்து வைக்கப்பட்டால், அவர்கள் செல்லுபடியாகும் நுழைவு முத்திரையை வைத்திருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், ”என்று உள்துறை அமைச்சகத்தின் ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.