போலியான செய்தி மசோதா மீது நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும், சுஹாகாம் கூறுகிறது

 

மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) போலியான செய்தி மீது அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

போலியான செய்தி தடை மசோதா 2018 -டை அதன் தற்போதைய வடிவத்தில் சுஹாகாம் ஆதரிக்க முடியாது என்று அதன் தலைவர் ரஸாலி இஸ்மாயில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகி’றார்.

போலியான செய்தி பிரச்சனையைக் கையாள்வதற்கான நியாயமான முறைகளைக் காண்பதற்கு ஒரு நாடாளுமன்ற குழு தேவைப்படுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.

போலியான செய்தி உலகளவிலான ஒரு பிரச்சனை. அது கையாளப்பட வேண்டும் என்பதை சுஹாகாம் ஒப்புக்கொள்ளும் வேளையில், போலியான செய்தி மசோதா 2018-ஐ பரிசீலனை செய்ததைத் தொடர்ந்து, அந்த மசோதாவை சுஹாகாம் ஆதரிக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

அந்த மசோதாவை சுஹாகாம் நிராகரிப்பதற்கு 10 காரணங்கள் இருப்பதாக ரஸாலி மேலும் கூறினார்.