அம்னோ தலைவர் நஜிப் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் ஹாடி அவாங் ஆகியோரைத் தவிர மற்றவர்களுடன் விவாதம் நடத்த தமக்கு விருப்பம் இல்லை என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார்.
தம்முடைய தகுதியில் உள்ளவர்களுடன் மட்டுமே விவாதம் நடத்துவேன், அவர்களுடைய அடியாள்களுடன் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.
“நான் ஹாடி மற்றும் நஜிப்புடன் விவாதம் நடத்த விரும்புகிறேன். நான் ஒரு கட்சியின் தலைவர். அவர்கள் கட்சிகளின் தலைவர்கள். ஆகவே, ஹாடியும் நஜிப்பும் வர வேண்டும் (என்னுடன் விவாதம் நடத்த). ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று கலந்துரையாடல் போல் இருக்கக்கூடாது. (நஜிப்) ஓடி விட்டார்.
“அவர்கள் (விவாதம்) நடத்த விரும்பினால், நான் அவர்களை வரவேற்கிறேன். நான் உணவும்கூட கொடுக்க முடியும்…(அவர்கள்) தகுதியற்ற அடியாள்களை பிடிக்கிறார்கள். அவர்களால் விவாதம் செய்ய முடியாது (எனக்கு சவால் விட முடியாது), அதைச் செய்ய வேண்டாம்”, என்று மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிளந்தானில் நாளை இரவு நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பாஸ் ஆதரவு அரசு சார்பற்ற ஏற்பாடு செய்துள்ள “மீண்டும் பிரதமராக மகாதிர் தகுதி பெற்றுள்ளாரா?” என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
அவர்கள் அடியாள்களோடு பேசித்தான் பழக்கம்! அதை அவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்!