பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தள்ளி வைப்பது நல்லது- நசிர் ரசாக்

பிரபல   வங்கியாளர்   நசிர்  அப்துல்  ரசாக்,  நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யப்பட்ட   பொய்ச்  செய்தித்   தடுப்புச்  சட்டவரைவைத்   தள்ளிவைக்க  வேண்டும்  என்று   விரும்புகிறார்.

பிரதமர்    நஜிப்     அப்துல்    ரசாக்கின்   சகோதரரான  நசிர்,  அது  சட்டமாக்கப்படுவதற்குமுன்னர்   முழுமையாக   விவாதிக்கப்பட   வேண்டும்  என்று  இன்ஸ்டாகிராம்  பதிவு  ஒன்றில்   குறிபிட்டிருந்தார்.

“பொய்ச் செய்தியை  வெறுப்பவன்தான்    என்றாலும்  பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டவரைவைத்   தள்ளிவைக்க   வேண்டும்.   அது  விரிவான  முறையில்   வரையப்பட   வேண்டும்,  விவாதிக்கப்பட    வேண்டும். அதைச்  சட்டமாக்குவதில்   அவசரம்  கூடாது”,  என  நசிர்   கூறினார்.

”இது  தனிப்பட்டவர்   கருத்துச்  சுதந்திரம்  சம்பந்தப்பட்டது. தெளிவற்ற  விளக்கங்களின்   அடிப்படையில்   கொடூரமான  தண்டனை  விதிக்கப்படும்  என்று  பயமுறுத்துவது   சமுதாயப்  பின்னடைவுக்கு   வழிகோலும்”,  என்றாரவர்.