எந்தவொரு அரசியல் கட்சியும் அரச மலாய் ரெஜிமெண்ட்டைக் கலைப்பது “கிட்டத்தட்ட முடியாத காரியம்” என்கிறது பெர்சத்துவான் பெட்ரியோட் கெபாங்சாஆன்(பெட்ரியோட்). நீண்ட வரலாற்றைக் கொண்ட அப்பட்டாளம் தொடர்ந்து இருப்பதற்கு அரசமைப்பு உத்தரவாதமளிக்கிறது.
அப்படி இருக்க தரைப்படையின் மிகப் பழைய பிரிவான அரச மலாய் ரெஜிமெண்ட் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தமக்கும் அதில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்ற அதிகாரிகளுக்கும் ”வியப்பையும் குழப்பத்தையும் மனக் கலக்கத்தையும்” அளிப்பதாக பெட்ரியோட்டின் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி.
வெள்ளிக்கிழமை ஆயுதப் படைகளையும் போலீசையும் சிறப்பிக்கும் விருந்து ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நஜிப், தவறான தலைமைத்துவம் ஆட்சிக்கு வந்தால் “மலேசியன் மலேசியா” கோட்பாட்டின்கீழ் அரச மலாய் ரெஜிமெண்ட்கூட கலைக்கப்படலாம் என்றார்.
“மலாய் ரெஜிமெண்ட் அமைக்கப்பட்ட வரலாறு அறிந்தவர்கள் ‘அதற்கு முடிவுகட்டுவதும்’ ‘அரச மலாய் ரெஜிமெண்ட் தேவையற்றது என்று அறிவிப்பதும்’ முடியாத காரியம் என்பதை உணர்வார்கள்”, என் அர்ஷாட் கூறினார்.
வரப்போகும் எந்தவொரு அரசாங்கமும் அதைச் செய்ய விரும்பாது என்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், அரச மலாய் ரெஜிமெண்டுக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் அப்படி ஒரு பிணைப்பு உள்ளது என்றார்.
அதை எப்போதோ கலைத்திருக்க வேண்டும்- அதன் தலைமை அதிகாரிகள் முதலில் வெள்ளையர்கள். நம்பிக்கை நாயகன் எல்லாரையும் பயமுறுத்துவதற்கு அள்ளி விட்டு கொண்டிருக்கிறான்