பிஎஸ்எம் சுங்கை சிப்புட் எம்பி டி.ஜெயக்குமார், தம் கட்சி எதிரணிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், அக்கூட்டணி தங்கள் கட்சியைப் பொருட்படுத்துவதில்லை என்றார்.
“2011 தொடங்கி அவர்களோடு ஒத்துழைக்கத் தயார் என்று கூறி வருகிறோம். அவர்கள் அதை மதிக்கவில்லை. அவர்கள் பக்கத்தான் ஹரப்பானை அமைத்தபோதும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தியபோதும் எங்களை அழைக்கவில்லை.
“அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், அவர்கள் எங்களைக் கண்டுக்கொள்வதில்லை.
“முற்றாக ஓரங்கட்டி விட்டார்கள், அதுதான் இப்போது பெரும் பிரச்னை”, என ஜெயக்குமார் கூறியதாக த ஸ்டார் தெரிவித்தது.
பிஎஸ்எம், சுங்கை சிப்புட் தவிர்த்து 15 இடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், அது கோரும் ஐந்து நாடாளுமன்ற இடங்களையும் 11 சட்டமன்ற இடங்களையும் ஒதுக்கித்தர ஹரப்பான் தயாராக இல்லை.
“எட்டு இடங்களைத் தந்து எட்டு இடங்களை விட்டுக்கொடுக்குமாறு சொன்னால்கூட ஆலோசிக்கலாம்.
“ஆனால், அவர்கள் பிஎஸ்எம் கேமரன் மலை, செமிஞ்சி, கோட்டா டமன்சாரா ஆகிய இடங்களில் போட்டியிடாவிட்டால் சுங்கை சிப்புட்டைக் எனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அங்கு நான் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
“குறிப்பிட்ட அந்த இடங்களில் நாங்கள் ஓரளவு வலுவாக இருக்கிறோம்”, என்றவர் த ஸ்டாரிடம் கூறினார்.
கடந்த வாரம் பிகேஆர் மற்றும் டிஏபி-யைச் சேர்ந்த மூத்த எம்பிகள் இருவர் தொகுதி கோரிக்கை குறித்து விவாதிக்க முன்வந்ததாக ஜெயக்குமார் கூறினார்.
அப்பேச்சுகளில் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் பிஎஸ்எம் 16 இடங்களிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்!
மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது உங்களின் கூற்று. என்ன செய்வது மறுபடியும் ஒரு முறை திரும்பி பாருங்கள் உங்களின் அதிகார பேச்சுக்கள். ஒரு அரசியல்வாதி மிகவும் பக்குவமாக அறிக்கைகள் விட வேண்டும். அது உங்களின் தலைவர்களுக்கு அறவே இல்லை. நீங்கள் திரு. வேதமூர்த்தி அவர்களை பாருங்கள் எப்படி இருந்து இன்று மிக வேகமாக அரசியல் பிரவேசம் செய்கிறார். பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பதாகக் கூறும் நீங்கள் அன்று ஏன் வீர பேச்சுக்கள். திரும்பி பாருங்கள் ஒரு முறை உங்களின் பேச்சுக்களை. நன்றி
PSM கேற்பது மிக அதிகம் ! பேராசை பெரும் நஷ்டம் என்று தங்களை பார்த்து மற்றவர்கள் கற்று கொள்ள pakataan harapaan உங்களை வெளியேயே வைத்திருக்கும் ! அப்பொழுதுதான் மற்ற பனியன் போட்ட சனியன்கள் சத்தம் போடாமல் இருப்பார்கள் ! இது இன்று உங்களுக்கு நடந்தது என்று எண்ணி விட வேண்டாம் காரணம் இப்படி அதிக முரண்டு பிடித்த HINDRAF கூட STRATEGIC PARTNER என்ற அங்கீகாரம் மட்டுமே கிடைத்துள்ளது pakataan harapaan னில். அதிக வீம்பு அரசியலுக்கு ஒத்து வராது என்பது உங்கள் கட்சியின் அரசியல் பாதையில் நன்றாக தெரியும். 13 வது தேர்தலில் SEMENYIH சடட மன்ற தொகுதியில் PSM 3000 , PR 4000 மற்றும் BN 5000 என்று ஓட்டை உடைத்து , சொந்தக்காசில் சூனியம் வைத்து கொண்டவர்கள் நீங்கள் என்பதை மறந்து விடாதீர்கள் !
ஒரு கொள்கைவாதியையும் ! ஒரு சுயநல வாதியையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் ! தமிழனின் பலவீனத்தை பயன் படுத்தி வீர வசனம் பேசி அரசியல் லாபத்திற்காகே உடன் பிறப்புகளையே உதாசீன படுத்தும் பச்சோந்திகள் !
” தமிழனின் பலவீனத்தை பயன் படுத்தி வீர வசனம் பேசி அரசியல் லாபத்திற்காகே உடன் பிறப்புகளையே உதாசீன படுத்தும் பச்சோந்திகள் ” என்றதும் எனக்கு மா இ கா டத்தோ சரவணன் ஞாபகம் வந்து விட்டது