‘நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படலாம்’

அடுத்த வார இறுதியில், பிரதமர் நஜிப் துன் ரசாக் பிஎன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிஎன் தொடர்பியல் உக்தி இயக்குநர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் இன்று தெரிவித்தார்.

“எங்கள் (பிஎன்) அனுபவத்தின் அடிப்படையில், பி.என். தேர்தல் அறிக்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே சமர்ப்பிக்கப்படும். இது ஒரு பாரம்பரியமாகிவிட்டது.

“ஆனால், நஜிப் இதனைக் கடைப்பிடிப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை,” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பிரதமர் துறை அமைச்சருமான அப்துல் ரஹ்மான், தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் வெளியிட அட்டவணை இடப்பட்டுள்ளது, அதேசமயம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாள் ஏப்ரல் 5 ஆகும் என்று கூறினார்.

அப்துல் ரஹ்மானின் கூற்றுப்படி, பி.என். தேர்தல் அறிக்கை புக்கிட் ஜாலில், கோலாலம்பூரில் ஒரு பெரிய விழாவில் வெளியிட ஏற்பாடு செய்யப்படுள்ளது.

அந்த அறிக்கையை தாம் பார்த்துவிட்டதாகவும், அதில் ‘நல்ல மற்றும் ஆச்சரியமான’ பல விஷயங்கள், குறிப்பாக சபா மாநிலத்திற்குக் கொண்டுள்ளது என்றும் அந்த அமைச்சர் கூறினார்.

-பெர்னாமா