சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் ஒரு ‘மைஓபிக்’, ஆழமற்ற சிந்தனையாளர் என்று ரஃபீடா அஜிஸ் சாடினார்.
ஆங்கிலத்தில் ‘மயோபிக்’ என்ற வார்த்தைக்குக் ‘கிட்டப்பார்வை கொண்டவர்’ என்று அர்த்தம். மேலும், கற்பனையற்றவர், படைப்பாற்றல் இல்லாதவர், சவால் குறைந்தவர், தொலைநோக்கு குறைந்தவர், குறுகிய / மேலோட்டமான சிந்தனை கொண்டவர் என்றெல்லாம் அர்த்தம் கொள்ளலாம் என்றும் அவர் விளக்கப்படுத்தினார்.
மார்ச் 8-ஆம் தேதியிட்ட, ‘தி மலேசிய இன்சைட்’ கட்டுரையில், என்.ஃப்.சி. அரசாங்கத்திற்கு ரிம248 மில்லியன் கடன் வைத்துள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது என ரஃபிடா குறிப்பிட்டார்.
“இதைப்பற்றிதான் நான் பேசுகிறேன், மக்களுடையப் பணம் ‘திருடப்பட்டுள்ளது’; நஸ்ரிக்கு ‘மேலோட்டமான அரசியல்’ சிந்தனை.
“தனிப்பட்ட என் அரசியலுடன் இதற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை, நான் 10 ஆண்டுகளாக ஓய்வெடுத்து இருக்கிறேன், ஆனால் மக்களின் பணம் இன்னும் தீர்வுக்கு வரவில்லை, இன்னும் 200 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டி உள்ளது.
“கடன் என்பது ‘கடன்தான்’, குறிப்பாக மக்கள் பணம். நஸ்ரி இந்த ‘மாக் சிக்’ மீதான சிந்தனையை அகற்றி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ‘அழுக்கு’ அரசியலை நிறுத்த வேண்டும்.
அம்னோ மகளிர் தலைவர் பதவிக்கு, ஷரிஷாட்டுடன் போட்டியிட்டு தோற்றுப் போனதால், ரஃபீடா ‘ஆத்திரத்தில்’ இருக்கிறார் என்ற நஸ்ரியின் கூற்றுக்கு ரஃபீடா இவ்வாறு பதிலளித்தார்
கடந்த வாரம், “இரும்பு பெண்” என்ற புனைப்பெயரைப் பெற்ற ரஃபீடா, தனது வயதைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த நஸ்ரியைச் சாடினார்.
1எம்டிபி ஊழல் பிரச்சனையில், நஜிப்பை விமர்சித்த ரஃபீடாவை, நஸ்ரி ‘வயதான மாக் சிக்’ என்று விமர்சித்தார்.
நேஷனல் ஃபீட்லோட் சென்டர் (என்.எஃப்.சி) ஊழல் தொடர்பான ரஃபீடாவின் விமர்சனம், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னாள் தோல்வியுற்றதை ஏற்க முடியாததால் வெளிபடுகிறது என்று நஸ்ரி கூறியதாக ‘சினார் ஹரியான்’ இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2011-இல், முதன் முதலாக தலைமை தணிக்கையாளர் அறிக்கையில் என்.எஃப்.சி வழக்கு வெளியிடப்பட்டது.
அதன்பின்னர், ஷாரிஸாட் மீதான கலங்கம் அழிக்கப்பட்டது. எனவே, அதிகாரிகளின் முடிவை ரஃபிடா மதிக்க வேண்டும் என்றார் நஸ்ரி.
ராபிடா நீயும் ஊழல்வாதிதான் ஆனாலும் நீ தைரியசாலி அத்துடன் முக்காடு போட்டு பத்தினி வேஷம் போடவில்லை– சிந்தித்து செயல் படுபவள்– உன் கல்வி 1969 க்கு முன் என்பது தெளிவு.