வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க வந்தால் மட்டுமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானால் வெற்றிபெற முடியும் என்கிறார் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“85 விழுக்காட்டுக்குக் குறையாமல் வாக்களிக்க வ்ர வேண்டும்”, என முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
அது ஒன்றும் அடைய முடியாத இலக்கல்ல என்று நம்பும் மகாதிர், கடந்த பொதுத் தேர்தலில் 84.8 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதைச் சுட்டினார்.
“மலாய் சுனாமி ஒன்று தேவை, அது நடக்கும்”, என்றாரவர்.
பெரும் பெரும்பானமையில் வெற்றி பெறுவதும் அவசியம் என்றாரவர்.
“சிறிய பெரும்பான்மை என்றால் பிஎன் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மூலமாக வாக்குகளைத் திணித்து இட்டு நிரப்பி விடும்”, என்றார்.
வாக்குகளை மறுபடி மறுபடி எண்ணும்போது பல தில்லுமுள்ளுகள் நிகழலாம். அஞ்சல் வாக்குகளை வைத்து மோசடி செய்வார்கள் என்றவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த நாட்டின் இன்றைய நிலை உன்னால் ஆக்கப்பட்டது காக்கா திமிர் . வரும் தேர்தலில் வெற்றி பெற்று இன்றைய நிலையை நீ மாற்றினால் உனக்கு மன்னிப்பு உண்டு.
வச்சு செய்யறதுன்னா என்னானு இன்னும் புரியல ! அதான் 85 % விழுக்காடு வேண்டும் என்கிறார் , கடைசியில் தான் தெரியும் நடக்க போற சித்து விளையாட்டிற்கு யார் கர்த்தா மற்றும் அகர்த்தா என்று !
பேய்க்கு பயந்து , பிசாசு கையில் மாட்டி கொள்ளவேண்டியதுதான் !அவர் காலத்தில் நடந்த தில்லு முள்ளுகள் நடக்கும் என்று தனது அனுபவத்தை சொல்லிவிட்டார் !
யார் பதவிக்கு வந்தாலும் அரசாங்கம் மானியம் கொடுக்கும். மா.இ.கா. காரன் வாயில் போட்டுக் கொள்ளுவான். இங்கே ஜ.செ.க. இந்தியன் வாயில் போட்டுக் கொள்ளுவான்! கணபதி ராவ் – ஜெயக்குமார் கதை தெரியாதா!