சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர், அரசியல் பரப்புரை செய்வதற்கு அனுமதி இல்லை என சிங்கை போலீசார் கூறியுள்ளனர்.
“ மலேசியப் பொதுத் தேர்தலில் குளோபல் பெர்சே உள்பட பலரும் வெளிநாடுவாழ் மலேசியர்களின் ஆதரவுக்குக் கோரிக்கைகள் விடுப்பதை சிங்கை போலீசார் அறிவர்.
“சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வசிக்கும் அல்லது சிங்கப்பூருக்கு வருகை புரியும் வெளிநாட்டவர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூரை ஒரு மேடையாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது”, என் சிங்கப்பூர் போலீஸ் ஓர் அறிக்கையில் கூறியது.

























