ஹரப்பான் பொது அடையாளச் சின்னம் : அடுத்த வாரம் முடிவு

பக்கத்தான்  ஹரப்பான்  அதன்  பொது  அடையாளச்  சின்னம்  குறித்து   அடுத்த   வாரம்  முடிவு  செய்யும்   என  பினாங்கு   முதலமைச்சர்   லிம்  குவான்  எங்   கூறினார்.

தலைமைத்துவ  மன்றம்   செவ்வாய்க்கிழமைகளில்   கூடுவது  வழக்கம்   அதில்தான்  இதுபோன்ற  விவகாரம்  விவாதிக்கப்படும்   என்று  டிஏபி  தலைமைச்   செயலாளரான   லிம்   கூறினார்.

“இப்போதைக்கு   அடுத்த  வாரம்   அது  குறித்து    அறிவிக்கப்படும்  என்று  மட்டுமே   என்னால்  கூற  முடியும்”,  என்றாரவர்.  லிம்,  பினாங்கு   ஹரப்பான்   தலைவருமாவார்.

பெர்சத்துக்  கட்சி    சங்கப்   பதிவக (ஆர்ஓஎஸ்)த்தின்   அங்கீகாரத்தைப்   பெறாமலிருப்பதால் ஹரப்பான்  கட்சிகள்    பொதுச்  சின்னத்தில்   போட்டிடுவது   சாத்தியமா    என்ற  கேள்வி   எழுப்பப்பட்டுள்ளது.

டிஏபி   அமைப்புச்   செயலாளர்   அந்தோனி  லோக்,   டிஏபி  அதன்  கட்சிச்   சின்னத்தில்  போட்டியிடும்   அல்லது  ஹரப்பான்  சின்னத்தில்   போட்டியிடும்   என்றார்.

பொதுச்  சின்னமொன்றில்   போட்டியிடுவது   இப்போதைக்கு   முடியாத   செயல்.  ஏனென்றால்,  பெர்சத்து  சிக்கல்  காரணமாக  பக்கத்தான்    ஹரப்பான்    கூட்டணியை   ஆர்ஓஎஸ்   இன்னும்  பதிவு   செய்யவில்லை.

ஹரப்பான்   சின்னம்     இல்லை   என்றால்   பெர்சத்துவும்  அமனாவும்   பிகேஆர்   சின்னத்தில்   போட்டியிட  தயாராக   உள்ளன.