டாக்டர் எம் இசா சட்டத்தைப் புதுப்பிப்பார், நல்லக்கருப்பன் நம்பிக்கை

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் உட்பட, அனைவரையும் ஒடுக்க டாக்டர் மகாதிர் முகமட் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை (இசா) மீண்டும் கொண்டுவருவார் என செனட்டர் எஸ்.நல்லக்கருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தங்கள் சொந்தத் தலைவராலேயே ஏமாற்றப்படலாம் என, அந்த முன்னாள் இசா தடுப்புக்காவல் கைதி ஹராப்பான் தலைவர்களை எச்சரித்தார்.

“மகாதீரின் நடவடிக்கைகளை இந்த ஹராப்பான் தலைவர்கள் எப்படி மறந்துபோயினர் என்று எனக்குத் தெரியவில்லை, அவர்களில் பலர் இசா சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

“அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 100 விழுக்காடு சொல்கிறேன், மீண்டும் அச்சட்டத்தைக் கொண்டுவந்து, அனைவரையும் அவர் கூட்டணியில் இருக்கும் கட்சிக்காரர்கள் உட்பட அனைவரையும் அவர் ஒடுக்குவார்,” என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பெர்சத்து தலைவர் தனது குற்றத்தை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார், அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், மீண்டும் அதையே செய்யத் தொடங்குவார் என நல்லகருப்பன் தெரிவித்தார்.

“டாக்டர் மகாதிர் ஒரு பாம்பு மாதிரி, நேரம் வாய்க்கும் போது கடித்துவிடுவார்,” என்றார் அவர்.

நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால், பொய்ச்செய்தி சட்டம் உட்பட, மக்களை ஒடுக்கும் பல சட்டங்கள் அகற்றப்படும் என கூறினார்.